விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள்
Techna Technical Institute இணையதளத்தை பயன்படுத்துவதற்கு முன் இந்த விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகளை கவனமாக வாசிக்கவும்.
விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள்
1. மாணவர் அடையாள அட்டை
மாணவர்கள் வகுப்புகளுக்கு வரும்போது தங்களது மாணவர் அடையாள அட்டையை (Student ID Card) கட்டாயமாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.
2. பாடக் கட்டணம்
மாணவர்கள் நிறுவனத்தினால் அறிவிக்கப்படும் கால எல்லைக்குள் பாடக் கட்டணங்களை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்த முடியாத பட்சத்தில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
3. வருகை
மாணவர்கள் நடைபெறும் அனைத்து வகுப்புகள், மீளாய்வு வகுப்புகள், மாதாந்திரத் தேர்வுகள் மற்றும் மாதிரிப் பரீட்சைகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். வருகை தர முடியாத அல்லது தாமதமாக வரக்கூடிய சந்தர்ப்பங்களில், அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் நிர்வாகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
4. கைப்பேசி பயன்பாடு
வகுப்பறை மற்றும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் கைப்பேசி பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக மட்டுமே நிர்வாகத்தின் முன் அனுமதியுடன் பயன்படுத்தலாம்.
5. மாணவர்களின் வாகனப் பாவனைக் கொள்கை
சைக்கிளைத் தவிர வேறு எந்த மோட்டார் வாகனத்தையும் மாணவர்கள் தாங்களே ஓட்டி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். அவசர சூழ்நிலைகளில் மட்டும், பெற்றோர்/பாதுகாவலர் நிறுவன நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு முன் அனுமதி பெற்ற பின்னரே மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் வரலாம். தொடர்ச்சியாக மோட்டார் வாகனத்தை கொண்டு வர வேண்டியிருந்தால், நிறுவன நிர்வாகத்தின் முன் அனுமதியுடனும், நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.
6. உடை மற்றும் தோற்றம்
மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் ஒழுக்கத்திற்கு ஏற்ற உடை, சிகை அலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் வர வேண்டும். சமயம் சார்ந்த உடைகள் மற்றும் எளிமையான அணிகலன்கள் அனுமதிக்கப்படும்.
7. நிறுவனச் சொத்துக்களை பாதுகாத்தல்
வகுப்பறைகள், மேசைகள், கதிரைகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றே சேதப்படுத்துவது ஒழுக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
8. ஒழுக்கமான நடத்தை
மாணவர்கள் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் சக மாணவர்களிடம் மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டு, சிறந்த கற்றல் சூழலை பேண வேண்டும்.
9. பரீட்சை ஒழுங்குவிதிகள்
வகுப்புத் தேர்வுகள், மாதாந்திரத் தேர்வுகள் மற்றும் மாதிரிப் பரீட்சைகளின் போது முறைகேடுகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களின் விடைத்தாளைப் பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாறுதல், மற்றவர்களிடம் கேட்டு எழுதுதல், குறிப்புகள், புத்தகங்கள், கைப்பேசிகள் அல்லது அனுமதியற்ற பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவை ஒழுக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
10. பெற்றோர் சந்திப்பு
நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் பெற்றோர் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் முக்கிய அறிவிப்பு நிகழ்வுகளில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும்.
11. பிரச்சினைகளை அறிவித்தல்
பாடம், நிறுவனம் அல்லது மாணவர்களுக்கிடையில் ஏற்படும் ஏதேனும் பிரச்சினைகள் உடனடியாக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.
12. தனிப்பட்ட பொருட்கள்
மாணவர்கள் தங்களது தனிப்பட்ட பொருட்களுக்கு தாங்களே பொறுப்பானவர்கள். பொருட்கள் இழக்கப்படுதல் அல்லது சேதமடைவதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
13. பெற்றோர் தொடர்பு
மாணவர்களின் வருகை, ஒழுக்கம், கல்வி முன்னேற்றம் அல்லது கட்டண விடயங்கள் தொடர்பாக தேவையான சந்தர்ப்பங்களில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் நிறுவனம் தொடர்பு கொள்ளும்.
14. நிறுவனத்தின் தீர்மானங்கள்
கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற நிறுவன நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் தீர்மானங்களை அனைத்து மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
15. நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பு
மாணவர்கள் நிறுவனத்தின் நற்பெயர், ஒழுக்கம் மற்றும் மதிப்புகளை பாதிக்கும் எந்தவொரு செயலிலும், நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ ஈடுபடக்கூடாது. நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் அல்லது உள்ளடக்கங்களை பகிரும் போது பொறுப்புடனும் மரியாதையுடனும் செயல்பட வேண்டும்.
நிபந்தனைகள் (Terms & Conditions)
- 1
தேவையான பதிவு மற்றும் கட்டண நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும்.
- 2
அனைத்து கட்டணங்களும் நிறுவனத்தினால் அறிவிக்கப்படும் கட்டண நடைமுறைகளுக்கு அமைவாக செலுத்தப்பட வேண்டும்.
- 3
தேவையெனில் வகுப்பு நேரங்கள், கால அட்டவணைகள், ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள் அல்லது கல்வி நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.
- 4
மாணவர்கள் கல்விக் காலம் முழுவதும் நிறுவனத்தின் அனைத்து விதிமுறைகளையும் ஒழுங்குவிதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
- 5
மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் நிறுவன நிகழ்வுகளில் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
- 6
கடுமையான ஒழுக்கக்கேடு அல்லது விதிமுறை மீறல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக எச்சரிக்கை, இடைநீக்கம் அல்லது மாணவர் சேர்க்கை ரத்து உள்ளிட்ட ஒழுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.
- 7
தேவைக்கேற்ப இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் மாற்றம் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு. மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர் / பாதுகாவலர்களுக்கும் உரிய முறையில் அறிவிக்கப்படும்.